புகழ்பெற்ற கோனியம்மன் கோவில் கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு வேண்டிக் கொள்ள திருமணத்தடை நீங்கும், மாங்கல்ய பாக்கியம், குழந்தைப்பேறு கிட்டும், நோய்கள் நீங்கும், தொழில் விருத்தி அடையும், என்பது நம்பிக்கை. கோனி அம்மனுக்கு வலதுபுறத்தில் தம்பதி சமேதராக நவக்கிரகங்கள் அமைத்துள்ளது இக்கோவிலின் சிறப்பாகும். கோனியம்மனை வேண்டி தங்கள் வீட்டுப்பிள்ளைக்கு வரன் கிடைக்கப்பெற்றவர்கள் கோவிலிலேயே நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.