நித்திரவிளை அருகே ராமவர்மன் புதுத்தெரு பகுதியில் சட்ட விரோதமாக மதுபிற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நித்திரவிளை போலீசார் சம்பவ இடத்தில் சென்று விரைந்து சென்று சோதனை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது வீட்டில் சோதனை செய்த போது, அந்த வீட்டில் 15 மது பாட்டில்கள் விற்பனைச் செய்ய பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீசார் முருகனை கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து அவரை ஜாமீனில் விடுவித்தனர்.