அரசு விட்டுமனை தருவதாக 6 லட்சம் மோசடி; கலெக்டரிடம் புகார்

60பார்த்தது
கேட்டாறு பட்டாரியர் தெருவை சேர்ந்தவர் நாகேஸ்வரி. இவர் நேற்று (16-ம் தேதி) தனது தாயாருடன் குமரி கலெக்டரிடம் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: - 
கடந்த 2023 ஆம் ஆண்டு கோட்டாறு பகுதியை சேர்ந்த வருவாய் அலுவலர் ஒருவர் பேரூர் பகுதியில் அரசு சார்பில் வீட்டுமனைகள் விற்பனை செய்வதாக கூறினார். அவர் கூறியது நம்பி நாங்கள் குடும்பத்தோடு சென்ற போது பேரூர் பகுதியில் தென்னை தொகுப்பு ஒன்றை காண்பித்தார். நண்பர் என ஒருவரை அறிமுகப்படுத்திக் கொண்டு தென்னை தோப்பில் ஐந்து சென்ட்  இடம் தருவதாக கூறி அதற்கு 6 லட்சம் ரூபாய் வேண்டும் என்றார்.

       நாங்கள் அதனை உண்மை என நம்பி நகை மற்றும் சிறுசேமிப்பு சீட்டு பணம் என ஆறு லட்சத்தை ஒரே தடவையாக கொடுத்தோம். பணத்தைப் பெற்றுக் கொண்டு இந்த நாள் வரை இடத்தை பதிவு செய்து கொடுக்கவில்லை.

      இது குறித்து ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்தில் 2023 ஆம் ஆண்டு புகார் மனு கொடுத்தோம். கோட்டாட்சியர் விசாரணை செய்து பணத்தை கடந்த ஏழாம் தேதி தருவதாக எழுத்து பூர்வமாக கூறினார். ஆனால் கூறியபடி இதுவரையிலும் பணம் தரவில்லை. எனவே பணத்தை மீட்டுத் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி