கொல்லங்கோடு அருகே குடிபோதையில் வாகன ஒட்டிய 4 பேர் கைது

52பார்த்தது
கொல்லங்கோடு அருகே குடிபோதையில் வாகன ஒட்டிய 4 பேர் கைது
கொல்லங்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமஸ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சூழால் பகுதியில் தாறுமாறாக ஆபத்து ஏற்படுத்தும் வகையிலவ ந்து கொண்டிருந்த ஆட்டோ ஒன்றை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். இதில் அந்த ஆட்டோவை ஓட்டி வந்த உச்சக்கடை பகுதியை சேர்ந்த பிரின்ஸ் (28) என்பவர் குடிபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டோவுடன் அவரை கைது செய்தனர்.

     இதே போல் ஊரம்பு பகுதி வழியாக குடிபோதையில் பைக் ஓட்டிய  காக்க விளை என்ற பகுதியை சேர்ந்த சைமன் (58) ததேயுபுரம் பகுதி வழியாக பைக் ஓட்டி வந்த குளத்தூர் பகுதியை சேர்ந்த கிளின்டன், கருங்குளம் பகுதி சேர்ந்த விஷ்ணுதாஸ் (22) என நான்கு பேர் மீது குடிபோதையில் வாகன ஓட்டியதாக வழக்கு பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி