கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பூதலிங்கசுவாமி-சிவகாமி அம்மாள் திருக்கோவிலில் தை பெருந்திருவிழா, திருகொடியேற்று நிகழ்ச்சி பிப்ரவரி 2ம் தேதியான இன்று காலை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பத்து நாள் நடைபெறும் திருவிழாவில் வரும் 10ம்தேதி தேரோட்டம் நடைப்பெற உள்ளது என கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.