கன்னியாகுமரி - Kanniyakumari

கன்னியாகுமரி
ஆஞ்சநேயருக்கு வெள்ளி அங்கி அணிந்து வழிபாடு.
Jul 20, 2024, 04:07 IST/கன்னியாகுமரி
கன்னியாகுமரி

ஆஞ்சநேயருக்கு வெள்ளி அங்கி அணிந்து வழிபாடு.

Jul 20, 2024, 04:07 IST
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான - உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இங்கு 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சாமி சிலை உள்ளது. இந்த ஆஞ்சநேயருக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். மேலும் மாதம் தோறும் மூலம் நட்சத்திரத்தை -யொட்டி வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடத்தப்படும். அதன் அடிப்படையில் நேற்று மூலம் நட்சத்திரத்தை யொட்டி ஆஞ்சநேயர் சாமிக்கு வெள்ளி அங்கிசார்த்திசிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, துளசி மாலை, வெண்ணெய், வடைமாலை ஆகிய வற்றை சார்த்தி சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். இதுபோல் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி தாணுமாலய சாமிக்கு - மாலை 5 மணி அளவில் தங்க அங்கி சார்த்தப்பட்டு கோவில் சுற்றுப்பிரகாரத்தில் உள்ள கைலாசநாதர் சன்னதியில் சிறப்பு அபிஷேகமும், நந்தி பகவானுக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.