பாஜக எம்பியும் பிரபல நடிகையுமான கங்கனா ரனாவத் மீது, பாடகர் ஜஸ்பிர் ஜாசி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர், "ஒருமுறை கங்கனா மற்றும் அவரது பெண் தோழி டெல்லியில் எனது காரில் அதிகளவு குடித்தனர். அப்போது அவர் தன்னிலை அரியாமல் இருந்தார். அவர் எடுத்துக் கொண்டது போல் மது மற்றும் போதைப் பொருளை, வேறு யாரும் அந்த அளவுக்கு எடுத்துக் கொண்டதை நான் பார்த்ததே இல்லை" என்று கூறியுள்ளார்.