திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்

50பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுபட்டினத்தில் காஞ்சி தெற்கு மாவட்ட திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றி திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் எடையாத்தூர் சரவணன் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக அரசியல் விமர்சகரும் சமூக ஆர்வலரும் மருத்துவருமான ஷர்மிளா பாலாஜி கலந்து கொண்டு பொது மக்களிடையே சிறப்புரை ஆற்றினார் அப்போது பேசியவர் திமுக அரசு பொறுப்பேற்று பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது என்றும் தளபதியாரின் கரத்தை வலுப்படுத்தவும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறவும் நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து நமது காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் செல்வத்தை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி விசிக மாவட்ட செயலாளர் கனல்விழி நிர்வாகிகள் அப்துல் மாலிக், கயல் மாரிமுத்து தாமோதரன் பாஸ்கர் விசிக ரவி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி