உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் இருந்து, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களுக்கு, அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையத்தில், பயணியர் நலனுக்காக எம். எல். ஏ. , தொகுதி மேம்பாட்டு நிதி 60 லட்சம் ரூபாய் செலவில், 2015- - 16ல் கூரை அமைக்கப்பட்டது.
எனினும், உத்திரமேரூரில் இருந்து வந்தவாசி, போளூர், தாம்பரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள், பேருந்து நிலையம் எதிரே உள்ள மெயின் சாலை வழியாகவே செல்கின்றன.
இதனால், பிரதான சாலை பேருந்து நிறுத்தத்திலும் நிழற்கூரை வசதி ஏற்படுத்த வேண்டும் என, பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தினர்.
இக்கோரிக்கையை ஏற்று, பேருந்து நிலையம் எதிரில் பயணியர் நிழற்கூரை அமைக்க, உத்திரமேரூர் தி. முக. , - எம். எல். ஏ. , தொகுதி மேம்பாட்டு நிதி 49 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதற்கான பணி, கடந்த மார்ச் மாதம் துவங்கி, தற்போது நிறைவு பெற்றுள்ளது.
பயன்பாட்டுக்கு வரும் முன்பே இந்த பயணியர் நிழற்கூரை பகுதியில், இருசக்கர வாகனங்கள் நிறுத்தியும், பூ மாலை போன்ற கடைகள் அமைத்தும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி வருகிறது.
இங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றுவதோடு, பயணியர் மட்டுமே நிழற்கூரையை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.