'பெரியார் சிலையை உடைப்பேன்' எனக் கூறிய பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்திப்பில் பேசிய ஹெச்.ராஜா, “நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வரும் 31ஆம் தேதிக்குள் மேல்முறையீடு செய்ய அவகாசம் கொடுத்துள்ளார்கள். அதற்குள் மேல்முறையீடு செய்யப்படும். அரசியல் ரீதியான திராவிடியன் ஸ்டாக்குகளுக்கு (DRAVIDIAN STOCK) எதிரான சண்டை தொடரும். இந்த மனநிலையில் எந்த மாற்றமுமில்லை" என்றார்.