பிஹார் மாநிலத்தின் மதுபானி நகரில் வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 50,294 பயனாளிகளுக்கு ரூ.1,121 கோடி மதிப்பில் கடன்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், “மத்திய அரசு தொடங்கியுள்ள திட்டங்களில் ஒவ்வொரு பெண்ணும் பங்குபெற வேண்டும். அப்போது தான் அதிகாரமிக்கவர்களாக மாற முடியும். 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா இலக்கை அடைய பெண்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்” என்றார்.