போலாந்து நாட்டில் தயாரிக்கப்படக்கூடிய போல்மோஸ் ஸ்பிரிடஸ் ரெக்டிஃபிகோவானி என்கிற ஒரு வகை ஓட்கா தான் உலகிலேயே வலிமையான மதுபானமாக கருதப்படுகிறது. இந்த ஓட்காவில் 96% அளவிற்கு ஆல்கஹால் உள்ளது. அதாவது இந்த மது மிக சுத்தமான ஆல்கஹால் ஆகும். இதை எலைட் பார்களில் விற்கப்படும் பொழுது மிக குறைவான அளவு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த ஓட்காவை அதிகமாக அருந்தினால் உடலுக்கு உடனடியாக பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.