கோவை, நீலகிரி மாவட்டங்களில் 20 செ.மீ.க்கும் அதிகமாக இன்று அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், மதுரை, விருதுநகர், தென்காசி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.