ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் உயிரியல் வல்லுனராக பணியாற்றும் டிம் கோல்சன் மனிதர்களுக்குப் பிறகான உலகம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அவர் கூறும் பொழுது, மனிதர்கள் உலகில் இருந்து முற்றிலுமாக அழிந்து போனால் கடலில் வாழக்கூடிய ஆக்டோபஸ் உயிரினங்கள் அடுத்த நாகரிகத்தை உருவாக்கும் என்றும், டைனோசர்கள் அழிந்து மனிதர்கள் நாகரிகத்தை தொடங்கியது போல, மனிதர்களும் அழிந்து விலங்குகள் புதிய நாகரிகத்தை உருவாக்கும் என கூறியுள்ளார்.