திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் பகுதியில் மழை இல்லாத காரணத்தால் அணைகள் நிரம்பாமலும், குளங்கள் நீர்வரத்தின்றியும் காணப்படுகிறது. விருப்பாச்சி பெருமாள்குளம், தங்கச்சியம்மாபட்டி சடையன்குளம், ஜவ்வாது பட்டி பெரியகுளம் உள்ளிட்டவை இதில் அடக்கம். இப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் நிரம்பினால் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும். தற்போது நீர்நிலைகளுக்கு நீர்வரத்து இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.