இங்கிலாந்தில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ் (50) தனது காதலியான தர்ன்ஜீத் (44) என்பவரைக் கடந்த மே 6ஆம் தேதி கொடூரமாக கொலை செய்தார். தர்ன்ஜீத்தின் மூளையில் ரத்தம் கசிந்து, 20 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ராஜ் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் ஆயுள் தண்டனை விதித்து தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.