ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க இருக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “மழை வெள்ளத்தால் மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். விழுப்புரம், மரக்காணம், திண்டிவனம் என அனைத்து இடங்களையும் சென்று பார்க்க உள்ளேன். பாதிப்பு குறித்து மத்திய அரசிற்கும், தேசிய தலைமைக்கும் தகவல் தர வேண்டும்” என்றார்.