பள்ளியின் மேல் கூரை விழுந்து மாணவர்கள் காயம் எம்எல்ஏ ஆய்வு

74பார்த்தது
திருப்போரூர் அடுத்த சிறுதாவூர் அரசு பள்ளியில் நேற்று மேல் கூரை பெயர்ந்து விழுந்து மாணவிகள் விபத்துக்குள்ளாகியதை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களையும் இடிந்து விழுந்த கட்டிடத்தையும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி நேரில் ஆய்வு செய்தார்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட சிறுதாவூர் ஊராட்சியில் உள்ள அரசினர் உயர்நிலை பள்ளி கட்டிடம் நேற்றைய தினம் வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே மேல்கூரை பெயர்ந்து விழுந்ததில் 10 ஆம் வகுப்பு மாணவிகள் சுஜிதா (14), பிரதிக்‌ஷா (14), தமிழரசி (14) உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர். இதையடுத்து பள்ளி தலைமையாசிரியர் ஸ்ரீலா காயமடைந்த மாணவிகளை தனது காரில் அழைத்து கொண்டு திருப்போரூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று சிகிச்சை அளித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் இன்று சிறுதாவூர் அரசு பள்ளியை துறை சார்ந்த அரசு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார் அப்போது பாதிக்கப்பட்ட மாணவியை சந்தித்து பேசியதோடு இடிந்து விழுந்த கட்டிடத்தையும் ஆய்வு செய்தார் தற்காலிகமாக மாணவர்கள் படிக்கும் இடத்தையும் பார்வையிட்டவர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி