காஞ்சி அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பி வைப்பு

55பார்த்தது
காஞ்சி அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பி வைப்பு
கோடை விடுமுறைக்குப்பின் வரும் 10ம் தேதி அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. வரும் 2024- - 25ம் கல்வி ஆண்டில், பள்ளி திறக்கும் முதல் நாளில், மாணவ- - மாணவியருக்கு இலவச பாடப்புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தில் 59 உயர்நிலை, 61 மேல்நிலை என, மொத்தம் 120 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இதில், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், வாலாஜாபாத் வட்டாரத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கும் தேவையான பாடப்புத்தகங்கள் வேன் வாயிலாக கடந்த வாரம் அனுப்பப்பட்டன.

நேற்று காஞ்சிபுரம் நகரில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி