சுற்றுச்சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு கூட்டம்

72பார்த்தது
சுற்றுச்சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் துவக்க விழா, சங்கத்தின் தலைவரும், ஓய்வுபெற்ற ஐ. ஏ. எஸ். , அதிகாரியுமான மனோகரன் தலைமையில், செங்கல்பட்டு தனியார் ஹோட்டலில், நேற்று நடந்தது.

செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாரி முதல்வர் கிள்ளிவளவன், சங்கத்தின் துணைத் தலைவர் ஹரி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.

இந்த கூட்டத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் பாதுகாக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி