புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி, தங்களது குழந்தைக்கு நபாட்டி வேஃபர் வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த வேஃபரை பிரித்துக் குழந்தைக்கு கொடுத்துள்ளனர். அப்போது, அதில் உயிருடன் புழுக்கள் நெழிந்துள்ளன. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக காலாவதி தேதியைப் பார்த்துள்ளனர். ஆனால், இந்த வேஃபர் காலாவதியாக இன்னும் நாட்கள் இருந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்த தம்பதி, உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தது.