தாம்பரம் - Tambaram

செங்கல்பட்டு: சாலையில் சூழும் மழைநீர்: புதுப்பட்டினத்தில் பாதிப்பு

செங்கல்பட்டு: சாலையில் சூழும் மழைநீர்: புதுப்பட்டினத்தில் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பகுதியில், பழைய கிழக்கு கடற்கரை சாலை கடக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன், சாலையில் குறிப்பிட்ட நீள பகுதிக்கு, மையத் தடுப்புடன் சாலை விரிவாக்கப்பட்டது. சென்னை தட சாலை பகுதி, தாழ்வாக அமைந்துள்ள நிலையில், கனமழையின்போது, கடைகளின் முன் சாலையை மூழ்கடித்து மழைநீர் தேங்கி, பல நாட்கள் நீடிக்கிறது. இப்பகுதி கடைகளுக்கு, கல்பாக்கம் அணுசக்தி துறையினர், பொருட்கள் வாங்க வருகின்றனர். சென்னை செல்லும் பயணியர், பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கின்றனர். அவர்கள் மழைநீர் சேற்றில் நடந்து அவதிக்குள்ளாகின்றனர். அங்குள்ள மின்மாற்றியையும் மழைநீர் சூழ்வதால், மின்விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. மழைநீர் வடிகால்வாயை, நெடுஞ்சாலைத் துறை தான் அமைக்க வேண்டும் என, ஊராட்சி நிர்வாகமும், உள்ளாட்சி நிர்வாகம் தான் அமைக்க வேண்டும் என, நெடுஞ்சாலை துறையும் முரண்டு பிடித்து வருகின்றன. அதனால், அப்பகுதிவாசிகள், வியாபாரிகள் தான் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மழைநீர் வடிகால்வாய் சிக்கலுக்கு, மாவட்ட நிர்வாகம் உடனடி தீர்வு காண வேண்டும் என, இப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా