ராயல் என்பீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் களமிறங்குகிறது. அதன்படி ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் வருகிற நவம்பர் மாதம் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. நவம்பர் மாதம் 2024 EICMA விழா தொடங்கும் முன் ராயல் என்பீல்டு தனது எலெக்ட்ரிக் பைக் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. புதிய எலெக்ட்ரிக் பைக் தொடர்பான காப்புரிமை படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருந்தன. இது அதிநவீன ரெட்ரோ-ஸ்டைலிங் கொண்டிருக்கும் என தெரியவந்தது.