வேதகிரீஸ்வரர் திருக்கோயில் சித்திரை பெருவிழா

84பார்த்தது
திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் திருக்கோயில் சித்திரை பெருவிழாவின் ஏழாம் நாள் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த உலக பிரசித்தி பெற்ற அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வரால் பாடல்பெற்ற திருத் தலமாக விளங்கும் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை ஸ்ரீ வேதகிரீஸ்வரர் திருக்கோயில் சித்திரை பெருவிழா கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் 7ம் நாள் நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது நான்கு மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு வேதகிரீஸ்வரர் அருள் பாலிக்கிறார் இந் நிகழ்வில் உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர்களில் இருந்தும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது பொதுமக்களின் பாதுகாப்பிற்காக செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி சாய் பிரணித் தலைமையில் திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் நட்ராஜ் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி