நடிகர் சந்தானத்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

74பார்த்தது
நடிகர் சந்தானத்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் ‘இங்க நான் தான் கிங்கு’ படம் வருகிற மே 10ம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புச் செழியன் தயாரிக்கும் இந்தப் படத்தை, இயக்குனர் ஆனந்த் நாராயணன் இயக்குகிறார். டி இமான் படத்திற்கு இசையமைக்கிறார். நடிகை பிரியாலயா இந்த படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் தம்பி ராமையா, முனீஷ்காந்த், பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி