இந்திய பயணத்தை திடீரென ரத்து செய்த மஸ்க்.!

81பார்த்தது
இந்திய பயணத்தை திடீரென ரத்து செய்த மஸ்க்.!
டெஸ்லா கார் தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக இடங்களை தேர்வு செய்யவும், பிரதமர் மோடியை சந்திப்பதற்காகவும் ஏப்ரல் 22ம் தேதி எலான் மஸ்க் இந்தியா வர இருந்த நிலையில் அந்தப் பயணத்தை ரத்து செய்வதாக அவர் அறிவித்துள்ளார். தவிர்க்க முடியாத காரணங்களால் பயணத்தை ஒத்தி வைப்பதாகவும், இந்த வருட இறுதிக்குள் வேறொரு நாளில் இந்தியா வர ஆவலுடன் இருப்பதாகவும் தனது ‘X’ தளத்தில் அவர் பதிவு வெளியிட்டிருக்கிறார். இந்தியாவில் டெஸ்லா கார் தொழிற்சாலை அமைந்தால், வேலையில்லாத பல இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி