வட மாநிலங்களில் பெய்த ஆலங்கட்டி மழை.. பலத்த சேதம்

83பார்த்தது
வட மாநிலங்களில் பெய்த ஆலங்கட்டி மழை.. பலத்த சேதம்
காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆலங்கட்டி மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இமாச்சல், மணாலியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக ராட்சத மரங்கள் விழுந்தன. அரியானாவிலும் கர்னால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஐஸ் கட்டிகளாக ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த நெல் மணிகள், தானியங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர், பாட்டியாலா உள்ளிட்ட இடங்களிலும் ஆலங்கட்டி மழை பெய்தது.

தொடர்புடைய செய்தி