அரசு இல்லத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

77பார்த்தது
செங்கல்பட்டு அடுத்த பரனுாரில், அரசு மாறுவாழ்வு இல்லம் உள்ளது. இந்த இல்லத்தை, கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி, கலெக்டர் ஆய்வு செய்தபோது, சக்கர நாற்கலி, போம்பெட் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்க கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, சமூக பொறுப்பு நிதி, 7. 19 லட்சம் ரூபாய் மதிப்பில், 95 படுக்கைகள், 190 படுக்கை விரிப்புகள், 45 சிறப்பு காலணிகள், ஸ்டெப்லைசர் 50 மற்றும் சக்கர நாற்காலி மூன்று உள்ளிட்ட உபகரணங்கள், பயனாளிகளுக்கு கலெக்டர் அருண்ராஜ் நேற்று வழங்கினார்.


மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல், அரசு மறுவாழ்வு இல்ல நிர்வாக அலுவலர் பூபாலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி