செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை ஒன்றியம், சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கோவிலம்பாக்கம் ஊராட்சியில் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான செல்வி. ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழா இன்று (மார்ச். 16 ஞாயிற்றுக்கிழமை) சிறப்பாக கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சியில் சென்னை புறநகர் மாவட்ட செயலாளரும் சோழிங்கநல்லூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான கே. பி. கந்தன் கலந்து கொண்டு அதிமுக கொடி ஏற்றி, கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கினார்.தொடர்ந்து மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் R. P. முருகன் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், பெண்களுக்கு புடவைகள் மற்றும் பொதுமக்கள் 1000 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.இதில் பரங்கிமலை ஒன்றிய அதிமுக செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், அதிமுக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிரணியினர், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.