டாஸ்மாக்கில் ஊழல் நடைபெறுவதைக் குறிப்பிடும் வகையில் சட்டையில் 'அந்த தியாகி யார்' என எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்குள் இன்று (ஏப். 07) வருகை தந்தனர். தொடர்ந்து பேரவைக்குள் பதாகைகள் கொண்டு வந்த 13 எம்.எல்.ஏக்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். இந்நிலையில் பேட்ஜை அகற்றிவிட்டு பேரவைக்குள் வருமாறு அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.