இந்தோ-யுரேசிய பாறைகள் மோதிக்கொண்டு ஏற்பட்ட மியான்மர் நிலநடுக்கத்தில் சிக்கி 2,719 பேர் உயிரிழந்துள்ளனர். பசுபிக் பெருங்கடலில் இதைவிட மிகப்பெரிய மெகா நிலநடுக்கம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டால் சுமார் 3 இலட்சம் மக்கள் உயிரிழப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் எப்போது ஏற்படும் என்பது கணிக்க இயலாதது. விரைவில் பேரழிவு உறுதி என்பதால் ஜப்பான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.