ரேஷன் கார்டில் KYC சரிபார்ப்பை முடிப்பதற்கான காலக்கெடு மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மோசடிகள் நடப்பதைத் தடுப்பதற்கு, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் KYC சரிபார்ப்பை முடிக்க மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இந்நடைமுறையை முடிப்பதற்கு நேற்றுடன் (மார்ச்.31) காலக்கெடு முடிவடைந்த நிலையில், காலக்கெடுவை ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறையை முடிக்காதவர்கள் பொது விநியோக முறை (PDS) உணவு தானிய மானியங்களைப் பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.