2025-26ம் நிதியாண்டில் தொடக்க மாதமான ஏப்ரலில் 7 SUV கார்களை அறிமுகப்படுத்த மாருதி சுசுகி, டாடா, கியா, வோக்ஸ்வேகன், ஸ்கோடா, நிசான் உள்ளிட்ட நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. வோக்ஸ்வேகன் டைகுவான் ஆர்-லைன், மாருதி சுசுகி இ விட்டாரா, டாடா ஹாரியர் ஈவி, நிசான் மேக்னைட் சிஎன்ஜி, நியூ ஜெனரல் ஸ்கோடா கோடியாக், டாடா கர்வி டார்க் எடிஷன் & சிட்ரோயன் பசால்ட் டார்க் பதிப்புஆகிய கார்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.