எல்லை தாண்டி மீனவர்கள் சென்றதால் உடைமைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களவையில் இருந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். முன்னதாக இவ்விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானம் மீது பேசிய டி.ஆர்.பாலு, மீனவர்கள் விவகாரத்தில் நிரந்தரத் தீர்வை எட்டும் வகையில் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். இலங்கை செல்லவுள்ள பிரதமர் மோடி, இப்பிரச்னை குறித்து அந்நாட்டு அதிபரிடம் பேச வேண்டும் என தெரிவித்திருந்தார்.