செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் தாமதம்.!!
முன்னறிவிப்பின்றி கூடுவாஞ்சேரியில் ஒருமணி நேரம் வரை இரயில் நிறுத்தப்படுவதாக பயணிகள் புகார்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் ரயில் நிலையம் அருகே நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் புறநகர் ரயில் சேவை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. நிலையில் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் செங்கல்பட்டில் இருந்து இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. செங்கல்பட்டில் இருந்து புறப்படும் ரயில் கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தப்படுவதாகவும், சுமார் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்திற்கு பிறகு ரயில் புறப்பட்டு செல்வதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக நீடித்து வரும் பிரச்சனையால் குறித்த நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியவில்லை எனவும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல முடியவில்லை என புகார் தெரிவித்துள்ளனர். தாம்பரம் அருகே நடைபெறும் பராமரிப்பு பணியை விரைந்து முடித்து புறநகர் மின்சார ரயில் சேவையை வழக்கம் போல இயக்கிட வேண்டுமென பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.