சுகம் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவ முகாம்

64பார்த்தது
களஞ்சிய மற்றும் வயலக குழுக்களால் ஆரம்பிக்கப்பட்ட சுகம் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவ முகாம் 100 க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்

தமிழகம் முழுவதும் பரவலாக மழையும் வெயிலும் பொது மக்களை வாட்டி வதைக்கும் நிலையில் மனிதர்களுக்கு காய்ச்சல் இருமல் என பல நோய்கள் உருவாகின்றன இதை தடுக்கும் வகையில்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் களஞ்சிய சுய உதவி குழு மற்றும் வயலக குழுக்களால் உருவாக்கப்பட்ட சுகம் மருத்துவமனையின் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் மணமை ஊராட்சி லிங்கமேடு பகுதியில் நடைபெற்றது திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் 5312 மகளிர்கள் ஒன்றிணைந்து 340 களஞ்சிய மகளிர் குழுக்களாக உருவாக்கி சுகம் மருத்துவமனை எனும் மருத்துவமனையை உருவாக்கினர் குறைந்த செலவில் தரமான மருத்துவம் வழங்குவதையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் மருத்துவமனையில் இன்றைய தினம் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமில் ரத்த அழுத்தம் சர்க்கரை அளவு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு தீர்வு காணப்பட்டது குறிப்பாக உடல் சோர்வு உள்ள மகளிர்களுக்கு சத்து ஊசி போடப்பட்டது முகாமில் களஞ்சிய ஒருங்கிணைப்பாளர்கள் மருத்துவர்கள் செவிலியர்கள் என பலர் உடனிருந்தனர் முகாமில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

தொடர்புடைய செய்தி