செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் பகுதியில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கானோர், வாடகைக்கு தங்கி, மகேந்திரா சிட்டி, ஒரகடம், மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றனர். சுற்றியுள்ள, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு, சிங்கபெருமாள் கோவில் வந்து, மற்ற பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இங்குள்ள ஜி. எஸ். டி. , சாலையில், மெல்ரோசாபுரம் - பகத்சிங் நகர் வரை, சாலையின் இருபுறமும் லாரி, தனியார் தொழிற்சாலை பேருந்துகள், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் ஆகியவை தினமும் நிறுத்தப்பட்டன.
அதனால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்பட்டு வந்தன. சிங்கபெருமாள் கோவில் பேருந்து நிறுத்தத்தில், 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், பயணியர் அவதியடைந்து வந்தனர்.