மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

64பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பரனூர் சுங்கச்சாவடி முதல் ஆத்தூர் சுங்கச்சாவடி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை கடந்த ஒரு மாத காலமாக சாலை பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது இதன் காரணமாக மதுராந்தகம் புறவழி சாலையில் இருந்து கருங்குழி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது.
குறிப்பாக வார இறுதி நாள் என்பதால் தேசிய நெடுஞ்சாலையில் அதிகப்படியான வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசலில்
வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

எனவே இது போன்ற போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்க வார இறுதி நாட்களில் பராமரிக்கும் பணியினை நடைபெற வேண்டாம் என வாகன ஓட்டிகள் குறிக்க வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி