புதிய பேருந்து சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி தொடங்கி வைத்தார்

53பார்த்தது
எங்க ஊருக்கு போறதுக்கு பஸ் இல்லாததால் 4: 30 மணிக்கு ஸ்கூல் விடுவாங்க ஆனா வீட்டுக்கு போக 6: 00 மணி ஆகும் பஸ் இல்லாமல் ரொம்ப கஷ்டப்படும் என மன வேதனைப்பட்ட மாணவர்களின் கவலையை தீர்த்து திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜிக்கு மாணவிகள் நன்றி தெரிவித்து மரியாதை நிமித்தமாக சால்வை அணிவித்து பாராட்டினர்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் குரல் கேட்போம் குறை களைவோம் என்ற தலைப்பில் திருப்போரூர் எம்எல்ஏ எஸ் எஸ் பாலாஜி பல்வேறு கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொது மக்களின் தேவைகளை கேட்டறிந்தார் அதன் ஒரு பகுதியாக திருப்போரூர் ஒன்றியம் மானாமதி அடுத்த அருங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசு திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ். பாலாஜியிடம் அருங்குன்றம் ஊராட்சி மற்றும் திருநிலை ஊராட்சி பகுதிகளில் உள்ள மாணவ மாணவியர் பள்ளி கல்லூரி சென்று மாலை நேரத்தில் வீடு திரும்புவதற்காக போதிய பேருந்து வசதி இல்லாததால் 1. 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்தே செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் நீண்ட நெடுநாட்கள் கோரிக்கையை அருங்குன்றம ஊராட்சி மன்ற தலைவர்கள் அன்பரசன் திருப்போரூர் எம். எல். ஏ பாலாஜியிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி