விசிக சார்பில் மகளிர் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனைக் கூட்டம்

74பார்த்தது
செங்கல்பட்டு தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மகளிர் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் தமிழினி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைவர் எழுச்சித் தமிழர் தலைமையில் கள்ளக்குறிச்சியில் வரும் இரண்டாம் தேதி மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெற உள்ளது.

அந்த மாநாட்டிற்கு வலு சேர்க்கும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள 28 ஒருங்கிணைப்பு குழு தலைவிகளுக்கு கிராமங்கள் தோறும் மது ஒழிப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்குவது குறித்தும், மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விதி வீதியாக சென்று துண்டு பிரசாரங்கள் வழங்க வேண்டும் என்பது குறித்தும், மது மற்றும் போதை பொருளால் ஏற்படும் தீமைகளை எவ்வாறு பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் எடுத்துரைப்பது குறித்தும் செங்கல்பட்டு தெற்கு மாவட்டத்தில் இருந்து மாநாட்டிற்கு 5000 இலிருந்து பத்தாயிரம் பெண்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் சூ. க. ஆதவன், ஒன்றிய செயலாளர்கள் கார்வேந்தன், புகழேந்தி, புரட்சிமாறன், பேரூர் செயலாளர் அகிலன், நகர செயலாளர் எழில்ராவணன், மகளிர் அணியினர் கங்கா, பூங்கோதை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி