மானிய கோரிக்கையில் கூலி உயர்வு அமல்படுத்த வலியுறுத்தல்

83பார்த்தது
மானிய கோரிக்கையில் கூலி உயர்வு அமல்படுத்த வலியுறுத்தல்
தமிழகத்தில் உள்ள கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள நெசவாளர்களுக்கு, அடிப்படை கூலியில், 10 சதவீதம் உயர்த்தப்படும் என, கைத்தறி துறை மானிய கோரிக்கை அறிவிப்புகளில், கைத்தறி துறை அமைச்சர் காந்தி, ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

கைத்தறி துறை சங்கங்களில், இந்த கூலி உயர்வு இதுவரை நடைமுறைக்கு வராததால், கைத்தறி நெசவாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அமைச்சரின் இந்த அறிவிப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என, காஞ்சிபுரத்தில் செயல்படும் கே. எஸ். பார்த்தசாரதி கைத்தறி நெசவு தொழிலாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர்.

சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம், தலைவர் கமலநாதன், செயலர் ஸ்டாலின் தலைமையில் சமீபத்தில் நடந்தது. அப்போது, கூலி உயர்வை வழங்குவதாக அறிவித்தும், காலம் கடத்துவது ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது என கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

கைத்தறி துறை இயக்குனரும், இந்த விவகாரத்தில், நடவடிக்கை எடுத்து, 10 சதவீத கூலி உயர்வை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என, சங்க நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி