செங்கை புறவழிச்சாலையில் பஸ்களை நிறுத்தாமல் புறக்கணிப்பு!

67பார்த்தது
செங்கை புறவழிச்சாலையில் பஸ்களை நிறுத்தாமல் புறக்கணிப்பு!
செங்கல்பட்டு புறவழிச்சாலையில், அனைத்து போக்குவரத்து கழக அரசு பேருந்துகளும் நின்று செல்லும் என, அரசு மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டும், இரவு நேரங்களில் பேருந்துகள் நிற்காததால், பயணியர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதனால், பரனுார் சுங்கச்சாவடியில் பேருந்துகள் நிறுத்தப்படுவதால், அங்கிருந்து செங்கல்பட்டு நகர்ப்பகுதிக்கு வர, ஆட்டோக்களுக்கு 200 ரூபாய்க்கு மேல் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என, செங்கல்பட்டு பயணியர் வேதனை தெரிவிக்கின்றனர்.

செங்கல்பட்டு நகரில், கலெக்டர் அலுவலகம், நீதிமன்றங்கள், வங்கிகள், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, அரசு சட்டக்கல்லுாரி, ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளன.

மகேந்திரா வேர்ல்டு சிட்டி, மறைமலை நகர், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளன. அவற்றில், தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி