புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா

58பார்த்தது
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம், ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை போடும் பணி

செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியநகர், ஆதிவாசிநகர், ஆகிய பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சன் பார்மா தொழிற்சாலை உதவியுடன் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் மற்றும் 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக் கடை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை போடும் படி பேரூராட்சி மன்ற தலைவர் தசரதன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பேரூர் செயல் அலுவலர் அருள்குமார், பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் உமா பூபதி ஆகியோர் கலந்துகொண்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை போடும் பணியை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்த பணிகளை ஆறு மாதத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் எனவும், கட்டிடங்களை தரமான முறையில் கட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பேரூராட்சி மன்ற தலைவர் தசரதன் அவர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி