சாலையில் கொட்டப்படும் கழிவுகளால் நோய் தொற்று பரவுபாயம்

54பார்த்தது
சாலையில் கொட்டப்படும் கழிவுகளால் நோய் தொற்று பரவுபாயம்
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காயரம்பேடு ஊராட்சியில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் முறையாக குப்பைகளை வீடு தோறும் சேகரிக்காமல் அலட்சியம் காட்டுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காயரம்பேடு ஊராட்சி முழுவதுமே ஆங்காங்கே சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாகவும் தற்போது மழை பெய்து வருவதால் கொசுகள்
அதிகளவில் உற்பத்தியாகி பலர் நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

அதேபோல் குப்பைகளில் இருந்து வெளியேரும் தூர்நாற்றத்தால் மக்களுக்கு தொற்று நோய் பரவி உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி பல முறை பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடமும், காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடமும் புகார்கள் கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர்

எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக சாலையில் கொட்டிக்கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி