சர்ச் புனரமைக்க அழைப்பு

85பார்த்தது
சர்ச் புனரமைக்க அழைப்பு
சர்ச்சுகளை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:

தமிழகத்தில் சொந்த கட்டடங்களில் இயங்கி வரும் சர்ச்சுகளை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் செய்வதற்கு, 2016 - -17ம் ஆண்டு முதல் நிதியுதவி வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு கலெக்டர் தலைமையிலான குழு வாயிலாக பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து, நிதியுதவி கோரி விண்ணப்பிக்கும் சர்ச்சுகளில் களஆய்வு நடைபெறும்.

கட்டடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குனருக்கு நிதி உதவிக்கு பரிந்துரை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி