விஜய்யின் தவெக கட்சி நிர்வாகிகளுடன் அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் 2வது நாளாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான வியூகம் வகுக்கும் வகையில், தவெகவின் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் பங்கேற்றுள்ளார். 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.