விமானத்தில் போதை பொருள் கடத்தல்

51பார்த்தது
லோவோஸ் நாட்டிலிருந்து, தாய்லாந்து வழியாக, சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ. 35 கோடி மதிப்புடைய 3. 3 கிலோ கோக்கைன் போதைப் பொருள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.

இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த கடத்தல் பயணியை, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில் கைது செய்து, மேலும் விசாரணை.


சென்னைக்கு வெளிநாடுகளில் இருந்து, பெருமளவு போதைப் பொருள் கடத்திக் கொண்டு வரப்படுவதாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை தனிப்படை அதிகாரிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று, அதிகாலையில் வந்து வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர். அப்போது தாய்லாந்து நாட்டில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த சுமார் 26 வயது இளைஞர் ஒருவர், சுற்றுலாப் பயணிகள் விசாவில், லாவோஸ் நாட்டில் இருந்து, தாய்லாந்து வழியாக சென்னைக்கு வந்திருந்தார்.

மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சந்தேகத்தில், அவரை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதை அடுத்து அவரை சோதித்தபோது விடுபட்டார் மேலும் அவரிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது

தொடர்புடைய செய்தி