தர்மேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா

57பார்த்தது
தர்மேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
தாம்பரம் அருகே மணிமங்கலத்தில், 1, 000 ஆண்டுகள் பழமையான தர்மேஸ்வரர் கோவில் உள்ளது.

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், சிவன் சன்னிதி, அம்மாள் சன்னிதிகள், தனித்தனி கோவில் போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளன.

இக்கோவிலில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, இம்மாதம் 15ம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகம் விழா துவங்கியது.

தொடர்ந்து, நான்கு கால யாக பூஜைகள் செய்யப்பட்டு நேற்று முன்தினம் கலசங்களில் புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

டேக்ஸ் :