காஞ்சி கோட்டாட்சியர் 5 மாதங்களில் மாற்றம்

80பார்த்தது
காஞ்சி கோட்டாட்சியர் 5 மாதங்களில் மாற்றம்
காஞ்சிபுரம் கோட்டாட்சியராக பணியாற்றி வந்த கலைவாணி, 5 மாதங்களிலேயே மாற்றப்பட்டார். அவருக்கு பதில், சென்னை குடிமை பொருள் உதவி கமிஷனராக பணியாற்றிய வெங்கடேசன் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வந்த ரம்யா, பணியிட மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு பதிலாக, திருவண்ணாமலை பயிற்சி துணை கலெக்டராக பணியாற்றி வந்த கலைவாணி என்பவரை, காஞ்சிபுரம் கோட்டாட்சியராக, கடந்த பிப்ரவரி மாதம் வருவாய் துறை நியமித்தது.

பணியில் சேர்ந்தவுடன், தன் இரு குழந்தைகளையும், அரசு பள்ளியில் சேர்த்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. இதையடுத்து, லோக்சபா தேர்தலில், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக பணியாற்றினார்.

இந்நிலையில், திடீரென கோட்டாட்சியர் கலைவாணியை பணியிட மாற்றம் செய்து, வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது. கோட்டாட்சியர் கலைவாணிக்கு, புதிய பணியிடம் ஏதும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் கோட்டாட்சியராக, சென்னை குடிமை பொருள் உதவி கமிஷனர் வெங்கடேசன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

உயரதிகாரிகளுடன் ஏற்பட்ட பனிப்போர் காரணமாகவே, ஐந்து மாதங்களில் கோட்டாட்சியர், பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி