வீட்டுவசதி துறை அமைச்சருக்கு பெயிரா தலைவர் கடிதம்.

74பார்த்தது
வீட்டுவசதி துறை அமைச்சருக்கு பெயிரா தலைவர் கடிதம்.

தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு சு. முத்துசாமி அவர்களுக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி அவர்கள், பொதுமக்களின் நலன் கருதி கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் வீட்டுமனை பிரிவுகளுக்கு DTCP அனுமதி வழங்கி வருகிறது. இதன் அடிப்படையில் ஏற்கனவே நகர் ஊரமைப்பு இயக்குனரகத்தின் (DCR) அபிவிருத்தி மற்றும் கட்டுப்பாடு விதிகளின்படி தமிழகம் முழுவதும் DTCP அனுமதி பெற்றுள்ள வீட்டுமனை பிரிவில் விண்ணப்பதாரர்களால் விற்பனை செய்யும் வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ள சமுதாயக்கூடம், பள்ளி, மருத்துவமனை, சுகாதார நிலையம் உள்ளிட்ட ஒதுக்கீடுகளை, அது குறித்த தன்மை அறியாமல், சந்தை மதிப்பை விட குறைவான விலைக்கு கிடைக்கிறது என்கிற அடிப்படையில், மேற்கண்ட ஒதுக்கீடுகளை வீட்டுமனை அபிவிருத்தியாளர்களிடமிருந்து, அப்பாவி பொதுமக்கள் வாங்கி வைத்துள்ளனர்.
நில பயன்பாடு வகைப்பாட்டினை மாற்றம் செய்து கொள்ளும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என, மேற்கண்ட வகையில் வகைப்பாடுள்ள ஒதுக்கீடு நிலங்களை வாங்கி வைத்துள்ள அப்பாவி பொதுமக்களின் சார்பாக பெயிரா தலைவர் டாக்டர். ஹென்றி அவர்கள் வீட்டுவசதி துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

தொடர்புடைய செய்தி